தியானம் / ஒரு தகவல்
குறித்த ஒருபொருளின் மீது மனத்தினை நிறுத்தி வைத்தலே தாரணை, அந்த நிலையில் சிறிது நேரம் நிலைத்து, இருந்தால் தியானம், தியானத்தை நீடித்து அப்பொருளில் ஊடுருவி இருக்கும் உருவமற்ற பிரம்மத்தைக் கண்டு அதனுடன் ஐக்கியமாகி இருக்கிற நிலைைய அடைந்தால் அத்தியானம் " சமாதி" எனப்படும். இந்த மூன்றும் ஒன்று கூடிய நிலை " சம்யமம்." என்படும். தாரணை, தியானம், சமாதி இந்த மூன்றும் ஒன்று கூடி இருப்பது சம்யமம்.
ஒருவன் சம்யமத்தில் சித்தி பெற்றால் எல்லா ஆற்றல்களும் அவனுக்கு கிட்டும் என்கிறார் யோக சாஸ்திர சித்தர் பதஞ்சலி முனிவர்.
தியானத்தின் பயன்கள்;
தியானத்தில் மூைளயின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது.
வியாதிகள் நீங்குகிறது,
சிந்தனை திறன் பெருகுகின்றது,
உறக்கத்தின் ஒய்வு கிட்டுகிறது,
மனம் அைமதி நிலை அடைகிறது,
இரத்த அழுத்தம் குறைகிறது,
ஆைகயால் தினமும் காைலயிலும்,மாலையிலும் கால்மணி நேரமாவது உலகை மறந்து புலன்களை அடக்கி, எண்ண அலைகளை நிறுத்தி இறைவனிடம் மனத்தை ஒருமுகப்படுத்தி, தியானம் செய்துவந்தால் உடலில் ஆற்றலும், உள்ளத்தின் ஆற்றலும் ஒருங்கே பெருகுமென்பதில் சற்றும் ஐயமில்லை, உள்ளத்தில் ஆற்றலை பெருக்கி, நமக்குள்ளே இருக்கும் தெய்வத் தன்ைமைய வெளிப்படுத்துவோமாக.
நன்றி; விவேகானந்தரின் தியான வழிகாட்டி