Tuesday, August 26, 2014

திருமந்திரம் - மூன்றாம் தந்திரம் - காரியசித்தி உபாயம்

காரியசித்தி உபாயம்

God realisation is feasible only through your body. Hence take care of the body well. Do not abuse it. Do not waste it.

704. உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
(ப. இ.) நம் உடம்பு திருவடியுணர்வு பெறுதற்பொருட்டே தரப்பட்டது. அவ் வுடம்பை மெய்யுணர்வு வழியில் பழக்கி அத் திருவடியுணர்வினைப் பெறுதல் வேண்டும். அதனை வீணே அழியவிட்டால் உயிர் பயனடையாது. அது பாற்கலத்தைப் பாலைப் பருகுவதன்முன் அழியவிடுவதை ஒக்கும். அவ் வுடம்பை வளர்க்கும் வழிவகை திருவைந்தெழுத்தெண்ணல். அதனை இடையறாது கணித்துக் கொண்டிருப்பதே உடம்பை வளர்க்கும் உபாயம். அதனாலேயே உயிர் வளர்ச்சியுண்டாம். உயிர்வளர்ச்சி - மெய்யுணர்வு. உபாயம் - வழிவகை. உடம்பார் உயிரார் அவற்றின் சிறப்புநோக்கி உயர்திணை வாய்பாட்டால் கூறப்பட்டன. இஃது அஃறிணை உயர்திணையில் வந்த திணைவழுவமைதி.

705. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
(ப. இ.) பாற்கலத்தைப் பால்நோக்கிப் பேணுவதுபோல் உடம்பினுள் சிவபெருமான் உயிர்க்குயிராய்க் கோவில் கொண்டருளினன் என்னும் உண்மையுணர்ந்து அதனை அவனுடைமை என்று பேணுகின்றேன். இவ் வுண்மையுணராதகாலத்து அதனை இழுக்குடையதென்று எண்ணினேன்.

Thursday, August 07, 2014

அட்டாங்க யோகம் - பிராணாயாமம் (வளிநிலை)

Pranayamam is all about breathing. 

Prelude to the content of this post is my previous post 
http://gowrisankar.blogspot.in/2014/08/blog-post_6.html

Once again while this content may serve as a material to keep you informed on various aspects of breathing, I strongly recommend having a guru to teach you pranayama and do the practice under his/her guidance.

The ancient sages of Tamil culture have done thorough analysis on breathing and more so is Thirumoolar. They have found that there is a strong connection between thought/emotion and breathing. I am sure that you too would have observe that when your thoughts/emotions change you breathing patterns too change. Say for example you would have noticed rapid breathing when you are afraid. Your breathing is more smooth when you are experiencing peace. 

Hence the sages derived the solution to control thoughts/emotions through controlled breathing. The reason for controlling the thoughts is to enable thoughts to always be in the domain of the almighty. This would eventually help in leading to salvation.
  
549. பிராணன் மனத்தோடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை.
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.
(ப. இ.) பிராணனாகிய உயிர்ப்புச் சிவகுருவினருளால் மனத்துடன் பொருந்தி அடங்கி இருக்குமானால் பிறப்பு இறப்பு இல்லை. உயிர்ப்பானது வலப்பால் இடப்பால் நாடிகளாகிய பிங்கலை இடைகலைகளில் மாறிமாறிப் போய் வருமானால், பேச்சுமுண்டாகும். அதனால் இறப்பும் பிறப்பும் இறவாது வந்துகொண்டிருக்கும். பேராது - பிரியாது. நடை பேறு - போதல், வருதல், (இறத்தல் பிறத்தல்).
(அ. சி.) மடைமாறி - இடைகலை - பிங்கலைகளை மாறிமாறி.
(4)

550. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
(ப. இ.) வளிநிலையாகிய மூச்சுப்பயிற்சி முறை இதிற் காணப்படுகிறது. ஏறுதல் - பூரகம். ஆறுதல் - கும்பகம். ஊறுதல் - இரேசகம். பூரகம் - உள்ளிழுத்தல். கும்பகம் - அடக்குதல். இரேசகம் - வெளிவிடுதல். வாமம் - இடகலை; இடமூக்கு. ஈரெட்டு - பதினாறுமாத்திரை, அறுபத்து நாலு மாத்திரை, முப்பத்திரண்டு மாத்திரை. இப் பயிற்சிக்குச் 'சிவ சிவ' என்னும் செந்தமிழ்த் திருமாமறை முடிவினை நான்குமுறை கணித்துத் தூய காற்றை உள்வாங்குதல் வேண்டும். அதுபோல 'சிவசிவ' என்பதனைப் பதினாறுமுறை கணித்து இரண்டு மூக்கையும் அடைத்து உள் நிறுத்துதல் வேண்டும். பின் 'சிவசிவ' என எட்டுமுறை கணித்து வலமூக்கைத் திறந்து வெளிவிடுதல் வேண்டும். இம்முறையே இடமூக்கிலும் பயிலுதல் வேண்டும் இவ்வாறு மாறிமாறி இயன்ற அளவு செய்தல் வேண்டும். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.
(அ. சி.) மாறுதல் - மடைமாறுதல்.

Thiru Sivakumar Ayya's discourse on Pranayamam Session 1


Thiru Sivakumar Ayya's discourse on Pranayamam Session 2

Wednesday, August 06, 2014

அட்டாங்க யோகம் - ஆதனம் (இருக்கை)

Yogasanas

Prelude to the content of this page is my previous blog post at
http://gowrisankar.blogspot.in/2014/08/blog-post_5.html

540. பங்கய மாதி பரந்தபல் ஆதனம்

அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்

சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.


(ப. இ.) தாமரை இருக்கை முதலாக இருக்கை பலதிறப்படும். அவற்றுள் எண்பேரிருக்கை நனிமிகச் சிறந்தன. அவ்வெட்டனுள்ளும், குற்றங்குறை ஏதும் இல்லாத இருக்கை, எல்லாரானும் ஒல்லும் வகை கைக்கொள்ளப்படும் இருக்கை சுவத்திகம் என்ப.

While steps 1 and 2 of the 8 fold path can be practiced after listening to discourses or reading about it from books , the third step - Asanas, have to be learnt from proper Yogasana Gurus.

Thirumular in this section talks about just 8 asanas. Kindly go through proper training for this and do not attempt doing it your self by going through any reading material or after watching any video instructions on Yoga. The reason for insisting that a guru is needed to teach Asana is because if wrongly taught and practised one would loose track on his/her progress in the eight fold path to salvation.

Thirumoolar himself states that while giving the names of the eight asanas, he recommends approaching a guru to learn it.

Here I have given a link to an authentic hata yoga teaching organisation.
http://youtu.be/ewKgQ9mVwQo



The 8 asanas mentions by Thriumoolar that are effective and could be practised by all are

1 . பத்மாதனமாகிய தாமரை இருக்கை
2.  சுவத்திக ஆதனம் 
3.  பத்திராசனம்
4.  குக்குட ஆசனம் - கோழி இருக்கை
5.  சிங்காதனம் - அரிமா இருக்கை
6.  சுகாதனம்
7.  To be deciphered from his verses  
8.  To be deciphered from his verses  





Tuesday, August 05, 2014

அட்டாங்க யோகம் - நியமம் (நன்றாற்றல்)

Prelude to the contents of this page is one of my earlier post at
http://gowrisankar.blogspot.in/2014/08/blog-post.html

10 things that need to be done 

539. தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.



(ப. இ.) 'உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை'யாகிய தவமும், திருவைந்தெழுத்தைக் கணித்தலாகிய செபமும், சிவனை நினைத்தலாகிய மகிழ்வும், முப்பொருளுண்மை கைக்கொள்வதாகிய மெய்ப்பொருள் ஆத்திகமும், சிவனடியார்களுக்குப் பணிந்து உள்ளன. உவந்து கொடுக்கும் தானமும், சிவனை வழிபடும் விரதமும், செந்தமிழ்த் திருமுறை சித்தாந்த நூல்களை ஓதலும், ஓதுவித்தலும், கேட்பித்தலும், கேட்டலும், நாடலும் முதலிய நயனார் மெய்யுணர்வு வேள்வி ஐந்தும் செய்தலும், திருவைந்தெழுத்தால் ஓம்பும் அகத்தழலும், திருவைந்தெழுத்தால் புரியும் அகப்பூசையும், அருளால் சிவனை மறவா நினைவால் உறவெனக் கொள்ளும் ஒண்மதியும் என்று சொல்லப்படும் பத்தும் நத்தும் நன்றாற்றலின் வித்தாகும். சந்தோடம் - மகிழ்ச்சி. ஆத்திகம் - கடவுட் கோள்.
(அ. சி.) சித்தாந்தக் கேள்வி - சைவ சித்தாந்த நூல்களிற் கூறும் பொருளைக் கேட்டல். மகம் - விருந்து முதலிய ஐம்பெரு வேள்வி. நிவம் - நிபம். இவை போன்ற நற்செயல்கள்.

The below 10 should be practiced

1. தவம் - think of  the almighty
2. செபம் - select a mantra and keep uttering the same
3. மகிழ்சி - சந்தோடம் - derive happiness on thinking of the almighty
4ஆத்திகம் - beleaf in heaven and hell
5. தானம் - to understand and give ( from ones own earnings ) what is required to the nobel people
6. விரதம் - to help tune body to nature by fasting on appropriate days
7. சித்தாந்த நூல்களை ஓதலும், ஓதுவித்தலும், கேட்பித்தலும், கேட்டலும், நாடலும் முதலிய நயனார் மெய்யுணர்வு வேள்வி ஐந்தும் செய்தலும் - think of relation ship between us and the almighty
8. Rituals -
9. Yagam -
10. பூசை - regular daily pooja

A discourse by Sivakumar Ayya on the second step - Niyamam followed by Asanam ( 3rd Step )




Monday, August 04, 2014

அட்டாங்க யோகம் - இயமம் (தீதகற்றல்)

Prelude to this page's content is one of my previous blog post at  http://gowrisankar.blogspot.com/2013/11/thirumoolar-thirumanthiram-1.html

Those that should never be done.

536. கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையின்நின் றானே.


It is necessary to ensure the below 10 sins are never committed

1. Killing ( do not kill any living being )
2. Lying ( do not lie to others )
3. Stealing ( do not steal those that belong to others )
4. Arrogance 
5. Dishonesty
6. Immodesty 
7. Consumption of food without sharing
8. Exhibiting likes and dislikes
9. Consumption of Alcohol
10. Lust

இயமம்: பெரும்பாலும் அடுத்தவருக்கு ஒரு துன்பமும் அளிக்காமல் தனது குடும்பம், தனது தொழில், அன்றாட வேலைகளை நெறி தவறாமல் ஒருவன் மேற்கொண்டு வந்தாலே, இந்த யோக நிலை கை கூடும். சுருங்கச் சொன்னால், கருமமே கண்ணாயிருப்பது !இதுதான் கர்மயோகம்.

This first step and following steps should be continuously followed to attain mukthi.

Listen to the tamil discourse by Thiru Sivakumar Ayya - in the below youtube link.