Tuesday, May 06, 2014

Tirumanthiram -769(789)

769. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி

குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலு மதியே.



(ப. இ.) ஆருயிர்கள் பிறத்தல்வேண்டும் என நந்தி திருவுள்ளக் குறிப்புக் கொண்டருளினன். அக் குறிப்பினால் மாயாகாரியமாகிய குரம்பையை ஒத்த இவ் வுடம்பு ஆருயிர்கட்கு அமைந்தது. இவ் வுடல் தொன்றுதொட்டு வருவது. பாசப்பற்றறுக்கக் கருவியாவதும் இதுவே. பாசங்கள் அழுது விலகும்படி செய்வார்க்கு மெய்யுணர்வு பெருகும்.