Tuesday, August 05, 2014

அட்டாங்க யோகம் - நியமம் (நன்றாற்றல்)

Prelude to the contents of this page is one of my earlier post at
http://gowrisankar.blogspot.in/2014/08/blog-post.html

10 things that need to be done 

539. தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.



(ப. இ.) 'உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை'யாகிய தவமும், திருவைந்தெழுத்தைக் கணித்தலாகிய செபமும், சிவனை நினைத்தலாகிய மகிழ்வும், முப்பொருளுண்மை கைக்கொள்வதாகிய மெய்ப்பொருள் ஆத்திகமும், சிவனடியார்களுக்குப் பணிந்து உள்ளன. உவந்து கொடுக்கும் தானமும், சிவனை வழிபடும் விரதமும், செந்தமிழ்த் திருமுறை சித்தாந்த நூல்களை ஓதலும், ஓதுவித்தலும், கேட்பித்தலும், கேட்டலும், நாடலும் முதலிய நயனார் மெய்யுணர்வு வேள்வி ஐந்தும் செய்தலும், திருவைந்தெழுத்தால் ஓம்பும் அகத்தழலும், திருவைந்தெழுத்தால் புரியும் அகப்பூசையும், அருளால் சிவனை மறவா நினைவால் உறவெனக் கொள்ளும் ஒண்மதியும் என்று சொல்லப்படும் பத்தும் நத்தும் நன்றாற்றலின் வித்தாகும். சந்தோடம் - மகிழ்ச்சி. ஆத்திகம் - கடவுட் கோள்.
(அ. சி.) சித்தாந்தக் கேள்வி - சைவ சித்தாந்த நூல்களிற் கூறும் பொருளைக் கேட்டல். மகம் - விருந்து முதலிய ஐம்பெரு வேள்வி. நிவம் - நிபம். இவை போன்ற நற்செயல்கள்.

The below 10 should be practiced

1. தவம் - think of  the almighty
2. செபம் - select a mantra and keep uttering the same
3. மகிழ்சி - சந்தோடம் - derive happiness on thinking of the almighty
4ஆத்திகம் - beleaf in heaven and hell
5. தானம் - to understand and give ( from ones own earnings ) what is required to the nobel people
6. விரதம் - to help tune body to nature by fasting on appropriate days
7. சித்தாந்த நூல்களை ஓதலும், ஓதுவித்தலும், கேட்பித்தலும், கேட்டலும், நாடலும் முதலிய நயனார் மெய்யுணர்வு வேள்வி ஐந்தும் செய்தலும் - think of relation ship between us and the almighty
8. Rituals -
9. Yagam -
10. பூசை - regular daily pooja

A discourse by Sivakumar Ayya on the second step - Niyamam followed by Asanam ( 3rd Step )




No comments: